No results found

    நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படும் 283 பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்-கலெக்டர் அம்ரித் பேட்டி


    ஊட்டி நகரை கட்டமைத்த ஜான் சல்லீவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்கு உரியவா் ஜான்சல்லீவன். அவரை நினைவு கூறும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் 2 அடி உயரத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, இதனை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

    ஊட்டி 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் நிறைவு விழாவில் தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியாா் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க உள்ளனா். நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படுவதாக, 283 பகுதிகள் கண்ட றியப்பட்டு உள்ளன.

    அந்த இடங்களில் 42 மண்டல குழு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அடுத்தபடியாக மழையால் ஏற்படும் மண் சரிவு, சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றுவதற்காக, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் குழுவினா் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஊட்டி ஆர்.டி.ஓ துரைசாமி, தாசில் தார் ராஜசேகா், ஊட்டி நகரசபை தலைவா் வாணீஸ்வரி, துணைத்த லைவா் ரவிக்குமாா், நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சிப் பொறியாளா் சேரமாகனி உள்பட அதிகாரிகள் பலா் உடன் இருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال