No results found

    நீலகிரி உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்


    நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட ஊராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற உள்ளாட்சி பிரதிநிதி கள் கூட்டம், ஊட்டி கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப் பினர்கள் இளங்கோவன், ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார் வரவேற்றார். உள்ளாட்சி தி.மு.க பிரதிநிதிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, ஷீலா கேத்ரின், ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், சதீஷ்குமார், நடராஜன், சுந்தரராஜ், முத்து, சின்னவர், ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி துணை தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி, நாகராஜ், பேரூராட்சி தலைவர்கள்-துணை தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சித்ராதேவி, ஹேமாமாலினி, சத்திய வாணி, வள்ளி, ராதா, பேபி, பங்கஜம், உமாநாத், ரமேஷ்குமார், செல்வம், விக்டர், நாகேஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும். பா.ஜ.க அரசு அமைந்தது முதல் நாட்டில், தங்களுக்கு எதிரான அரசியல் கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மத்திய விசாரணை ஏஜென்சிகளை கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. அவர்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மட்டு மின்றி தலைமை செயலகத்திலும் அத்துமீறி புகுந்து சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தி உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் மனித நேயமற்ற முறையில் நடந்தது கண்டிக்கத்தக்கது. வெறுப்பு அரசியலை கையில் எடுத்து உள்ள பா.ஜ.க. அரசிற்கு எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இறுதியில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال